Thursday, November 17, 2011

கரும்புலிகள்

தாவி வந்த படைகளை வேரறுத்த வேங்கைகளே, 
வெள்ளமென திரண்ட படைகளை, 
சில்லறையாய் சிதற விட்டீர்களே, 
தன்னின மானம் காக்க , 
இன்னுயிரை தியாகம் செய்தீர்களே, 
தமிழர் தம் வீடுகளில் காவியம் ஆனீர்களே , 
மரித்தும் மலரான நம் மாவீரர்களே...!!!!!
மக்கள் மானம் காக்க மாவீரர் ஆனிர்களே, 

தமிழரை தன்மான தமிழரென பறைசாற்றியது உங்கள் துணிச்சல், 
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும், 
இதை உலகுக்கு உணர்த்தியவர்கள் நீங்களே, 
மக்கள் நெஞ்சமதில் நீங்கா இடம் பிடித்தவர்கள், 
மறைந்தும் மறையாத நம் தெய்வங்கள்..!!!

காவிச்சென்றது கந்தகம் இல்லை , 

தமிழனின் தன்மானம், 
அடிபணியாத ஆதிக்கம், 
வணங்கா மண்ணின் பெருமை, 
தமிழனின் வீரம், 
தமிழனின் விவேகம், 
அடி பணிய வைத்தாய் அரக்கனை...!!!!

கப்பலில் வந்த காடையர்கள், 

நம்மை ஆள்வதா? 
சிங்கத்தின் வழி வந்த சீர்கெட்டவர்களுக்கு, 
தமிழின் பெருமை எப்படி தெரியும் ? 
பஞ்சம் பிழைக்க படகில் வந்தவர்களுக்கு? 
நாங்கள் பணிவதா? 
வஞ்சகனுக்கு நீ நெருப்பு.. நமக்கு உன்மேல் , 
மாபெரும் விருப்பு மாவீரா ........!!!!

மனித வெடிகுண்டை உலகுக்கு , 

அறிமுகம் செய்த மாவீரன் நீ, 
உன் தியாகத்தில் இங்கு வாழும் , 
பலரில் நானும் ஒருவன், 
மெச்சுகிறேன் உன் வீரத்தை, 
உன்னை நினைக்கையிலே , 
குளமாகிறது எனது விழிகள்.

நெல்லியடி, கல்வியடி, மில்லரடி 

அடித்தாயடா நீ நெத்தியடி, 
முதல் அடியிலேயே மூர்ச்சை ஆனார்கள், 
வந்த வல்லரசெல்லாம் ஒரு கணம் நடுங்கின, 
சிறப்பு படைகளை சிதைத்த எம் மாவீரர்கள் நீங்கள், 
உலக வரலாற்றில் முதல் மனித வெடிகுண்டு , 
தமிழன் எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் என , 
உலகுக்கு காட்டிய காவல் தெய்வமே..!!! 
கோடான கோடி வணக்கங்கள் ...!!!!

தீபச்சுடர்களே .. 

நீங்கள் யாருமே புதைக்க படவில்லை , 
மாறாக மக்கள் மனதில் விதைக்க பட்டுள்ளீர்கள் . 
மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம், 
தளிர் விட்டு முளைக்கும் காலம் தொலைவில் இல்லை, 
தலைவனின் சொல்லே தாரக மந்திரம் என , 
உங்கள் சிரம் மேல் கொண்டு நீங்கள் செய்த தியாகம், 
மாறாது உங்கள் மேல் நாம் கொண்ட மோகம் ,

தமிழரின் கலங்கரை விளக்கமான தமிழ் ஈழத்துக்காக , 

நீங்கள் ஆற்றிய தியாகம் அளப்பெரியது , 
அதை சொல்ல வார்த்தைகள் போதாது , 
இந்த  நாளில் உங்கள் நினைவுகளால் , 
தவிக்கும் தமிழன்.

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket