Sunday, November 20, 2011

விமானத்தில் ஈழத்தமிழன்

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
எங்கே போவதென தெரியாமல் போகின்றோம்
தாய் மண்ணை பிரிந்து தாயையும் பிரிந்து
சோகம் மட்டும் சுமந்து செல்கின்றோம் 
உணர்ச்சியை கொன்று வலிகளை சுமந்து
நடக்கின்ற பிணமாய் பறக்கின்றோம் ..

உயிர் அதை காக்க உடலையும் காக்க
வறுமையை போக்க பசியினை நீக்க
பல மைல் தாண்டி பறக்கின்றோம் ..
உடமையை இழந்து உறவினை பிரிந்து
கனவினை புதைத்து கண்ணீரை சுமந்து
வெறும் கையோடு பறக்கின்றோம்

உறவுகள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்ற
தீயினில் எரியும் திரியானோம் ..
அடுத்தவன் காலில் செருப்பாய் தேய்ந்து
அடிமை வாழ்க்கையை சுமக்கின்றோம்
அடுத்தவன் நாட்டில் அகதியாய் சேர
வானில் இன்று மிதக்கின்றோம் ....

தன் மானமும் வீரமும் எஞ்சிய நிலையில்
தாய் மண்ணின் ஏக்கங்களோடு பறக்கின்றோம்
என்றோ ஈழம் பிறக்கும் என்றே எண்ணி
உயிர் அற்ற ஜடமாய் செல்கின்றோம்
எப்போதந்த நாள் வரும் என்று மனதினில்
எண்ணியே செல்கிறோம்...  

1 comment:

  1. ஈழத்தமிழன் தாயை,தாய் மண்ணை பிரிந்து வலியுடன் வேறு வழியின்றி,அடுத்தவன் நாட்டில் அகதியாக என்ற நினைப்புடன் செல்கிறான்.மீண்டும் தமிழ் ஈழம் மலரும் போது ,தாய் மண்ணில் கால்பதிக்கும் கனத்த கனவுடன் ,பிரிய மனமின்றி செல்கின்றான்,அந்த வலி ,அந்த வேதனை புரிகிறது,
    ஆனால் இந்திய தமிழன் அப்படி இல்லை,அவன் மனநிலை முற்றும் வேறாக உள்ளது,அவன் பொருள் தேடி,செல்கின்றான்,அவன் இந்தியாவை,தமிழ்நாட்டை பிரிந்து செல்லும் போது,வேதனை,வலி இல்லை,மாறாக எப்படியும் சில ஆண்டுகளில் அமெரிக்க குடியுரிமை,ஆஸ்திரேலிய குடிரிமை பெற்றுவிட வேண்டும் என்ற கனவுடன் செல்கிறான்,தனக்கு பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடிரிமை,அஸ்திரேலிய குடியுரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக,பிரசவத்தையும் சொந்த ,பந்தம் என்ற துணை இல்லை என்றாலும்,அந்த அந்நிய நாட்டிலே பெற்றுக்கொள்ள விரும்புகிறான்,அவன் செல்லும் போது தாயை,தாய் மண்ணை புரிந்து செல்கிறோம் என்ற வலியோ,வேதனையோ இல்லை,ஏன் மீண்டும் எப்போது திரும்ப வேண்டும் என்ற திட்டமும் இல்லை,ஆம் இந்திய தமிழன் நீங்கள் அகதியாக வெளிநாட்டில் வாழ விரும்புகிறான்,அவனுக்கு தாய் மண்ணோ,சொந்தங்களோ,பெரிதாக தெரியவில்லை,அங்கு இருக்கும் சொகுசுவாழ்க்கை தான் பெரிதாக இருக்கிறது,இந்திய தமிழன் மீண்டும் இந்தியா வர விரும்புவதில்லை,
    வெளி நாட்டில் இந்திய தமிழன்,அந்நாட்டு பிரஜைப் போல் வாழ்க்கை முறையுடன் வாழ்கிறான்,ஆனால் ஈழத்தமிழன் அந்நாட்டுக்கு சென்றாலும்,தமிழ் கலாச்சாரத்தையும்,மொழியையும் மறககாமலும்,தன் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வாழ்கிறான்,
    ஈழத்தமிழனுக்கு,இந்திய தமிழனுக்கு உள்ள முரண்,

    ReplyDelete

PhotobucketPhotobucket
Photobucket