Friday, November 18, 2011

சிரிப்பு

அருமையான வாழ்வின் அடையாளம் சிரிப்பு
நோயற்ற வாழ்வின் சிறப்பே சிரிப்பு
நண்பர்களை ஒன்றிணைக்கும் ஆயுதம்  சிரிப்பு
பகைவரை பணியவைக்க சிரிப்பே சிறப்பு
மட்டற்ற மகிழ்ச்சியின் மூலதனம் சிரிப்பு
மனிதருக்கு தேவை மகத்தான சிரிப்பு

ஆடவருக்கு தேவை ஆனந்த சிரிப்பு
பெண்டிருக்கு தேவை அடக்கமான சிரிப்பு
அரக்கனின் குணமே ஆணவச்  சிரிப்பு
தேவனின் இயல்பே அன்பான சிரிப்பு
கயவனின் வாயிலும் கபடச்சிரிப்பு
கலைஞனுக்கு அழகு சிந்தனையிலும் சிரிப்பு


சோகத்தை மறக்க மழலையின் சிரிப்பு
துன்பத்தை துரத்த குழந்தையின் புன்சிரிப்பு
காரியத்தை நிறைவேற்றும் அம்மாவின் சிரிப்பு
கண்ணிரண்டை குளிர்விக்கும் காதலியின் சிரிப்பு
தெவிட்டாத ஒரே இசை சீரான சிரிப்பு
சர்வதேசத்தின் பொது மொழி சிரிப்பு..

சிரிப்பின்றேல் இவ்வுலகம் சிரிப்புக்கு உள்ளாகும்..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket