Thursday, November 17, 2011

வீரத் தமிழனே..!!


வீறு கொண்டெழுந்த வீர தமிழனே ,
சோதனைகளை கடந்து ,
சாதனைகளை நுகர்ந்து ,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறறுயிர் காக்கவென ,
தன்னின மானம் காக்கவென ,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?

கூரை சரிந்த உனது இல்லமும்,
குருதி படிந்த உன் முற்றமும் ,
நினைக்கையிலே பதைக்குதடா
நீ கடந்த பாதை நினைவினிலேஅழியாது ,
நெஞ்சை விட்டகலாது,
அந்த கோர நினைவுகளின் சலனம்,
மறக்குமா????

சொந்த நாட்டினிலே அனாதை என்றஅவலப்பெயர்?
பிறந்த தேசத்திலே பிள்ளைகள்இல்லை,
வளர்ந்த வீட்டினிலே ஆவிகளின்நடமாட்டம்,
எப்போதுதான் தீருமோ எங்களின்ஏக்கம் ??

குட்ட குட்ட குனிந்தது போதும்...!!!!
வீறு கொண்டெழுந்த வேங்கைபோல் ,
சீறிப்பாயும் சிறுத்தை போல்,
ஆயிரம் விளக்குடன் எழுந்துநிற்கும் ஆதவன் போலே,
தோல்விகளை கண்டு மிரளாது,
அஞ்சா நெஞ்சுடன்,
விதியை மிஞ்சும் மதியுடன் ,
நாங்கள் வீரத் தமிழரே எனப்பறைசாற்ற


எழுந்து நிற்போம்.....!!!!

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket