Saturday, November 19, 2011

அம்மா

பத்து திங்கள் பத்திரமாய் கருவோடு எனை தாங்கி
சீராட்டி தாலாட்டி ரத்தத்தை பாலாக்கி எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து காவலனாய் நீ மாறி
என் பசியை நீ போக்கி பசிமறந்த பிள்ளையானாய்

கதறி அழும் வேளைகளில் ஓடி வந்து கட்டிடுவாய்
காய்ச்சல் வந்து நான் கிடந்தால் கை மருந்து நீ கொடுப்பாய்
மழையில் நான் நனைத்தால் முந்தானை குடை பிடிப்பாய்
முள் தைக்கும் பாதை தனில் எனக்காக செருப்பாவாய்

உன் வாழ்க்கையை தீயாக்கி அதிலே நீ திரியானாய்
என் பாதையின்  இருள் நீக்க நீ அங்கே ஒளி தந்தாய்
என் நெற்றி வியர்வை துளி அகற்ற விசிறி ஆனாயே
யார் என்னை வெறுத்தாலும் நீ என்னை வெறுக்கலையே

பிறக்கும் போதும் வலி கொடுத்தேன் பொறுத்து கொண்டாய்
பிறந்த பின்பும் துயர் கொடுத்தேன் சகித்துக்கொண்டாய்
படிக்காத நீ என்க்கு பட்டமும் வாங்கி கொடுத்தாய்
படித்த நான் உனக்கென்ன கைமாறு செய்வேனோ?

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket