Sunday, January 22, 2012

கவிதைக்கு கவிதை

ஆதியும் அந்தமும் இல்லா 
அரும்பெரும் சோதியும்
ஒரு கணம் செவிசாய்க்கும் 
பேனை முழங்கும் வரி கேட்க..

காகித குப்பைகளில் 
வீற்றிருக்கும் முத்து 
காதலர் மனங்களை 
கட்டித்தழுவும் சொத்து 

இயற்கையும் செயற்கையும் 
உறவாடி இழையோடும் 
உவமானம் உவமேயம் 
குறைவின்றி வழிந்தோடும் 

நிலவுக்கே அழகூட்டும் 
 ஒப்பனைக்கருவி 
காகிதத்தில் விளையும் 
கருகாத பயிர் ...

கைக்கெட்டா வானமும் 
கைவிரல் நுனியில் தவழும் 
கைவிரல் நகங்களும் 
காகிதத்தில் கவிதையாகும்

சேனைகளும் பேனை முனையில் 
சுக்குநூறாய் சிதறும் 
சுக்குநூறாகிய இதயங்கள் பல 
கவிதை கேட்டால் இணையும்..

கனவுக்கும் நனவுக்கும் 
உறவுப்பாலம் அமைக்கும் 
பாலைவன காட்சிக்கும் 
கூரைகள் விரிக்கும்..

நாளேடு தாங்கிவரும் கோரமான 
செய்திகளின் பக்கத்தில் 
சாந்தமாய் வீற்றிருக்கும் அழகி.
அவள் ஒரு தேன் குழலி 

மறைமுக விம்பம் காட்டும் 
மாயக்கண்ணாடி 
ஜடங்களும் நடமாடும் 
அதிசய பிறவி..

கவியொன்று முழங்குமெனில்
செவியெல்லாம் தேன்பாயும் 
கவிஞர்கள் கூடிவிட்டால் 
மேடைகளும் உயிர்கொள்ளும்.. 


No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket