Tuesday, November 29, 2011

காதல்

பட்டுப்போன வாழ்க்கையிலே 
மொட்டுப்பூக்கும் யோகம் காதல் 
வற்றிப்போன உதடுகளுக்கு 
வற்றாத ஜீவநதி காதல் 
அமாவாசை இரவுகளில் 
கனவினில் நிலவு காதல்..

சேலையில் நூலை போல்
வாழ்கையின் வசந்தம் காதல் 
வெய்யிலில் நிழலைப்போல் 
பிரியாத காவல் காதல் ..
நினைவுகளை தவழ வைக்கும் 
சிரிக்கின்ற மழலை காதல்...

கலங்கிய மனதுகளின் 
தெளிந்த நீர் காதல் ...
இறந்தகாலங்களில் 
உயிர் வாழும் காலம் காதல் 
தவம் கலைத்த யோகிகளின் 
குணம் மாற காரணம் காதல்...

மூச்சு விடும் காற்றைப்போல் 
கேட்காமல் கிடைப்பது காதல் 
பணம் வாங்கும் பொருள் அன்றி 
கொடுக்காமல் எடுப்பது காதல் 
கடல் தேடும் நதி போலே 
உயிர் தேடும் தேடல் காதல்..

படிக்காத பாமரரை சிறப்பான 
பாவலராக்கும் காதல்
தொட முடியாத எல்லைகளை 
தேடிச்செல்லும் ஏணி காதல் 
வாடிய இள மனசுகள் 
தாகம் தீர்க்கும் கேணி காதல் ...

காதல் இல்லா ஊரினிலே 
காமப்பிசாசுகள் கலையாடும் 
காதலின் நிழலினில் தான் 
நிலவுகள் துயில் கொள்ளும்
மண் தின்னும் உடம்பிற்கு 
உயிரோட்டம் தானே காதல்...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket