Wednesday, November 30, 2011

நட்பு

வாழ்கையின் வனப்பில் கூந்தலிலே 
நீந்தும் பூக்கள் எல்லாம் வாடிவிடும் 
காலநிலை மாறினாலும் உதிராமல் 
காத்திருந்து வாடாமல் பூத்திருந்து 
வாழும் காலமெல்லாம் வாசம் வீசும் 
உயிர்களில் மட்டும் பூக்கும் நட்பு.. 

கொண்ட காதல் சிலநேரம் தொண்டை 
முள்ளாய் சிக்கும் போதும் நட்பு மட்டும்
உடனிருந்து காதல் தந்த ரணங்களை
கணங்களிலே அழித்து விட்டு விழி 
தந்த கண்ணீரை தன் கைகுட்டையில் 
தாங்கி நிற்கும் சுமைதாங்கி நட்பு ...

Tuesday, November 29, 2011

காதல்

பட்டுப்போன வாழ்க்கையிலே 
மொட்டுப்பூக்கும் யோகம் காதல் 
வற்றிப்போன உதடுகளுக்கு 
வற்றாத ஜீவநதி காதல் 
அமாவாசை இரவுகளில் 
கனவினில் நிலவு காதல்..

சேலையில் நூலை போல்
வாழ்கையின் வசந்தம் காதல் 
வெய்யிலில் நிழலைப்போல் 
பிரியாத காவல் காதல் ..
நினைவுகளை தவழ வைக்கும் 
சிரிக்கின்ற மழலை காதல்...

Monday, November 28, 2011

வண்டிச்சக்கரங்கள்

கால நீரோடையில் கசங்கிப்போய்
கிடக்கிறது வாழ்கையின் இலட்சியவெறி
தட்டி கொடுப்பவரும் துட்டுக்கு
கைநீட்டும் சீர்கெட்ட உலகம் இது

ஓட்டை விழுந்த பானையாய்
உடலை விட்டு உயிர் கசியுது
துடுப்பிழந்த ஓடம் போலே
கரை சேர ஏங்குது ......

Sunday, November 27, 2011

காதல் வலி தந்தவளே..

காதலுடன் சண்டையிட்டு என்னை விட்டு
சென்றுவிட்டாய். சென்றுவிட்ட உன்னை
எண்ணி கொன்றுவிட்டேன் என் மனதை
சிறை வைத்து விட்டேன் என் நிழலை

என் மனகோட்டையின் முழுநிலத்தில்
கட்டிவைத்தேன் காதல் கோட்டை
ராணியில்லா கோட்டையிலே
சாமரங்கள் சபிக்கிறதே ...

Friday, November 25, 2011

தன்னம்பிக்கை


காயம் இன்றி ஒருநாளும்
கருங்கல் சிலையாகாது
நெஞ்சில் துளை வாங்காமல்
புல்லாங்குழல் கீதம் தராது..

அச்சாணி நெரிபட்டால்
சக்கரம் சிரிக்கும்
வலிதந்த வாழ்கை தானே
சரித்திரம் படைக்கும்..

Thursday, November 24, 2011

கார்த்திகை மலர்கள்

கல்லறையில் துயில் கொள்ளும் மாவீரரே,
நீங்கள் கண்திறக்கும் மாதம் இந்த கார்த்திகை தானே
செந்தமிழன் வாழவென சிலை ஆனிரோ?
இங்கு வன்கொடுமை தீரவேண்டி படை சேர்ந்தீரே..!!!

எழுத்தில் மட்டும் ஆயுதம் இல்லை கழுத்திலும் தானே
களத்தினில் உங்கள் வீரம் எழுத்தினில் கண்டோம்
நீங்கள் நடந்து வந்த பாதை எல்லாம் கார்த்திகை மலர்கள்
உங்கள் பாதம் தொட்டு ஆசிபெற கார்த்திகையில் பூக்கும் .

கருப்பினை காதலித்த கதை சொல்லுங்கள்
போர்களமே வாழ்க்கை ஆன விதி பாருங்கள்
கழுத்தினில் நஞ்சு குப்பி கடல் அலையிலும் உங்கள் சக்தி
தமிழினில் உங்கள் பக்தி அழித்தீர் பகையை சுத்தி..

Tuesday, November 22, 2011

கரு விழியாலே சாய்த்தவளே

உன் கூந்தல் காதலிக்கும் மலரை
என் புத்தகம் தேடிப்பார் இருக்கும்
சருகான அம்மலரை சிதறாமல் சேமித்து
நானுனக்கு வாழ்த்து மடல் நெய்வேனே...

கரு விழியாலே சாய்த்தவளே
கலகங்கள் செய்தவளே உன் விழி
சொல்லும் கதை கேட்டு என்
வாயினிலே சிரிப்(பூ)பு மலரும்....

உனைப்பார்த்து தலை ஆட்டும்
மரங்களிலே தாவிவந்து
மனிதகுரங்கெல்லாம் காத்திருக்கும்
உன் நினைவுகளை கவர்ந்து செல்ல ...

வாழ்க்கை பய(ண)ம்

அன்னை மடியில் செல்லக்குழந்தையாய் சிலகாலம் 
பாட்டியின் மடியில் பேரனாய் தவழ்ந்தேன் சில காலம் 
தம்பியுடன் சண்டையிடும் சகோதரனாய் சில காலம் 
மாமனுக்கு செலவு வைக்கும் மருமகனாய் சிலகாலம் 
காலப்பெருவழியில் சில காலம் கழித்துவிட்டேன் சுகமாக 
இனிவரும் காலம் எல்லாம் எனக்கு கஷ்ட காலமா? 

அன்னைக்கு மகனாக மீதமுள்ள பலகடமை 
தம்பிக்கு அண்ணனாக செய்யவேண்டும் பல கடமை 
அக்காவின் தம்பியாக அடைக்க வேண்டும் என் கடனை 
குடும்ப தீபம் அணையாமல் காப்பதுதான் என் கடமை 
வாழ்க்கை பயணத்தை தொடங்கிவிட்டேன் சிறு வயதில் 
பயமே வாழ்க்கை ஆகி உறைந்து விட்டேன் என் வழியில்...

Monday, November 21, 2011

காதலிக்காக கவிதை

உலகுக்கு நீ ஒன்றும் அழகி இல்லை
ஆனால் எனக்கு நீதான் உலக அழகி
பணத்திற்கு நான் அடிமை இல்லை
ஆனால் உன் பாசத்திற்கு நான் அடிமை
சுற்றிவந்த பல வேஷங்களை வெறுத்தேன்  
உன்மேல் கொண்ட நேசத்தினால்...

சுவரில் உள்ள சித்திரங்கள் பிடிக்கவில்லை
என் மனதில் உன் விம்பம் குடியிருப்பதால்
வானவில்லின் வர்ணம் பிடிக்கவில்லை
நீ கண்ணிமைக்கும் அழகினை பார்த்தபோது
கடல் அலையும் எனக்கு பிடிக்கவில்லை
என்னுள்ளே உன் நினைவலைகள் மோதுவதால்...

கைதியின் மடல்

காதல் தந்த நினைவுகளில் கண்மூடி தவமிருந்தேன் 
காலையில் கலைய மறுக்கும் கனவுகள் கண்டிருந்தேன் 
பசியென்றால் எதுவென்று சத்தியமாய் நான் அறியேன் 
சிரிப்பின்றி என் உதடு ஒரு போதும் இருந்ததில்லை 
சிப்பிக்குள் முத்தாக சொந்தங்கள் எனை சூழ இருந்ததுவே 
இன்று தூண்டிலுக்கு இரையான புழுவாகி போனேனே.

காவல்துறை சொத்தான சந்தேகம் என் வாழ்வில் 
தீக்குச்சிக்கு பயந்தவனை தீவிரவாதி என்றுவிட்டதே
நிலவை சுடும் என்றால் நம்புகிற உலகம் 
என்னை சுற்றவாளி என்றால் நம்ப மறுக்கிறதே 
குற்றவாளி கூண்டு கூட தலை குனியும் வெட்கத்தால் 
சத்திய சோதனை எனக்குதான் வரவேண்டுமா? 

Sunday, November 20, 2011

காதல் என்றால்?

காதல் என்றால் கவலையா? 
கானல் நீரின் உருவமா? 
நெருஞ்சி முள்ளின் வடிவமா? 
நெஞ்சை கிழிக்கும் கருவியா? 
பாசம் கட்டும் வேஷமா ?
உயிரை எடுக்கும் யமனா? 
இல்லை ...
இரவை துரத்தும் நிலவா? 
வாசம் வீசும் மலரா? 
கலைய மறுக்கும் கனவா? 
உயிரை கொடுக்கும் உறவா? 
கண்ணிரண்டில் ஒளியா? 
என் வாழ்க்கையின் வழியா? 

விமானத்தில் ஈழத்தமிழன்

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
எங்கே போவதென தெரியாமல் போகின்றோம்
தாய் மண்ணை பிரிந்து தாயையும் பிரிந்து
சோகம் மட்டும் சுமந்து செல்கின்றோம் 
உணர்ச்சியை கொன்று வலிகளை சுமந்து
நடக்கின்ற பிணமாய் பறக்கின்றோம் ..

உயிர் அதை காக்க உடலையும் காக்க
வறுமையை போக்க பசியினை நீக்க
பல மைல் தாண்டி பறக்கின்றோம் ..
உடமையை இழந்து உறவினை பிரிந்து
கனவினை புதைத்து கண்ணீரை சுமந்து
வெறும் கையோடு பறக்கின்றோம்

Saturday, November 19, 2011

அம்மா

பத்து திங்கள் பத்திரமாய் கருவோடு எனை தாங்கி
சீராட்டி தாலாட்டி ரத்தத்தை பாலாக்கி எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து காவலனாய் நீ மாறி
என் பசியை நீ போக்கி பசிமறந்த பிள்ளையானாய்

கதறி அழும் வேளைகளில் ஓடி வந்து கட்டிடுவாய்
காய்ச்சல் வந்து நான் கிடந்தால் கை மருந்து நீ கொடுப்பாய்
மழையில் நான் நனைத்தால் முந்தானை குடை பிடிப்பாய்
முள் தைக்கும் பாதை தனில் எனக்காக செருப்பாவாய்

புலம்பெயர் தமிழா

ஊரோடு உறவாட முடியாமல், 
வேரோடு உறவிழந்து, 
அயல் நாடெனும் விடுதியில், 
சொந்தபந்தமின்றி தனியாக , 
தன்னுறவுகளுக்காக, 
இராப்பகலின்றி நீ படும் பெரும் பாடு, 
நாமறிவோம்,
பிறநாட்டில் வாழ்ந்தாலும், 
தன்நாட்டு உறவுகளுக்காக, 
நீ சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும், 
பதில் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை ..

Friday, November 18, 2011

சிரிப்பு

அருமையான வாழ்வின் அடையாளம் சிரிப்பு
நோயற்ற வாழ்வின் சிறப்பே சிரிப்பு
நண்பர்களை ஒன்றிணைக்கும் ஆயுதம்  சிரிப்பு
பகைவரை பணியவைக்க சிரிப்பே சிறப்பு
மட்டற்ற மகிழ்ச்சியின் மூலதனம் சிரிப்பு
மனிதருக்கு தேவை மகத்தான சிரிப்பு

ஆடவருக்கு தேவை ஆனந்த சிரிப்பு
பெண்டிருக்கு தேவை அடக்கமான சிரிப்பு
அரக்கனின் குணமே ஆணவச்  சிரிப்பு
தேவனின் இயல்பே அன்பான சிரிப்பு
கயவனின் வாயிலும் கபடச்சிரிப்பு
கலைஞனுக்கு அழகு சிந்தனையிலும் சிரிப்பு

இத்தனையும் காதலினால்

இரவுகளை தொலைத்தோம் 
தூக்கத்தை வெறுத்தோம் 
கனவுகளை புதைத்தோம் 
கண்ணிமைக்க மறுத்தோம் 
கவிதை பல கேட்டோம் 
நிலவினை ரசித்தோம் 
மலரிடம் கதைத்தோம் 
சுவரிடம் மோதினோம் 
தலையணை கிழித்தோம் 
பாடலும் பாடினோம் 

மறக்குமா நெஞ்சம்?

வணங்கா மண்ணில் வரிப்புலியின் வீரம்
இளமையோடு வீசுகின்ற இளந்தென்றல் 
கனிவோடு எமை ஈர்க்கும் அழகான சூழல் 
காதுகளை கவர்ந்திழுக்கும் கன்னியரின் பாடல் 
பரிவோடு எமை நோக்கும் பாசமுள்ள தாய்மார் 
அன்போடு எமை முறைக்கும் அன்பான பெண்கள் 
இவையெல்லாம் மறக்குமா நெஞ்சம்?

Thursday, November 17, 2011

தோழியா இல்லை காதலியா?


உயிர் பிரிந்து போகும்போது உயிராய் வந்தவளே 
மனமுடைந்து போகும் போது  மருந்தாய் ஆனவளே
சிறகிழந்து நிற்கையில சிறகு தந்தவளே 
நிலையிழந்த போது நினைவு தந்தவளே..
தோற்கும் போதெல்லாம் தோள் தந்தவளே 
எனக்காக நீ அழும்போதுஎனக்குள்ளே ஒரு கேள்வி 
நீ என் தோழியா இல்லை காதலியா?

கரும்புலிகள்

தாவி வந்த படைகளை வேரறுத்த வேங்கைகளே, 
வெள்ளமென திரண்ட படைகளை, 
சில்லறையாய் சிதற விட்டீர்களே, 
தன்னின மானம் காக்க , 
இன்னுயிரை தியாகம் செய்தீர்களே, 
தமிழர் தம் வீடுகளில் காவியம் ஆனீர்களே , 
மரித்தும் மலரான நம் மாவீரர்களே...!!!!!

வீரத் தமிழனே..!!


வீறு கொண்டெழுந்த வீர தமிழனே ,
சோதனைகளை கடந்து ,
சாதனைகளை நுகர்ந்து ,
தாய்மண்ணின் மானம் காக்க,
தன்னுயிரை துச்சமென எண்ணி,
பிறறுயிர் காக்கவென ,
தன்னின மானம் காக்கவென ,
மறவர் வழியில் நடந்து,
நீபட்ட பெரும் பாடு யாரறிவார்?

காதலெனும் கல்லறையில்..!!!

இலையில் நரம்பு போல் 
இணைந்தே வாழ்வோம்
இரு மனம் இல்லை ஒரு மனம்
என்றாய் நமக்கு பிரிவென்றால்
அது நம் மரணத்தில் தான் என்றாய்


உன்னுடன் பழகிய அந்த நாட்கள்
என்னை நான் மறந்த அந்த பொற்காலம் 
என்னை நீ மறந்த நிகழ்காலம் 
இப்போது என்னை கொல்லும் அந்த இறந்த காலம் 
என்னவாகுமோ என் எதிர் காலம்???

தோழியின் பிரிவு

காகிதம் நனைகிறது 
கண்கள் குளமாகியதால் 
தோழியே உன்னை எண்ணி 
கவிதை வடிக்க தொடங்குகிறேன் 
கவிதை முடியும் முன் 
காகிதம் கரையுமோ தெரியவில்லை ..

மான்குட்டியாய் துள்ளி திரிந்து 
மனம் விட்டு பல கதை பேசி 
ஓடை தண்ணீரில் ஓடி விளையாடி 
மாற்றான் தோப்பில் மாங்காய் உண்டு 
சந்தோசமாய் சிறகு விரித்து பறந்தோம் 
சிறகொடிந்து போனதே

காதலும் மோகமும்


விடிகாலை பொழுதுகளில் 
ஆதவனாய் அவதரித்தாய் 
இருள் சூழும் வேளைகளில் 
முழுநிலவாய் உருவெடுத்ததாய்
கனவொன்று நான்கண்டால் அதில் 
கருப்பொருளும் நீ ஆனாய் 
கண்விழித்து நான் எழுந்தால் 
காட்சி எல்லாம் உன் முகம் தானே

நீ நடந்த பாதச் சுவடுகள் தானே 
என் பயண திசைகாட்டிகள்  
நீ தானே என் மனத்திரையில் 
நான் காணும் திரைப்படங்கள் 
இன்று நீ இன்றி துடிக்குதடி 
உயிரற்ற என் இதயம் ...