Thursday, November 17, 2011

காதலும் மோகமும்


விடிகாலை பொழுதுகளில் 
ஆதவனாய் அவதரித்தாய் 
இருள் சூழும் வேளைகளில் 
முழுநிலவாய் உருவெடுத்ததாய்
கனவொன்று நான்கண்டால் அதில் 
கருப்பொருளும் நீ ஆனாய் 
கண்விழித்து நான் எழுந்தால் 
காட்சி எல்லாம் உன் முகம் தானே

நீ நடந்த பாதச் சுவடுகள் தானே 
என் பயண திசைகாட்டிகள்  
நீ தானே என் மனத்திரையில் 
நான் காணும் திரைப்படங்கள் 
இன்று நீ இன்றி துடிக்குதடி 
உயிரற்ற என் இதயம் ...

கருங்கல்லான என் வாழ்வில் 
உளியாக வந்தாயே 
சிலையாக எனை செதுக்கி 
உயிர்கூட தந்தாயே ..
உயிருக்குள் நீ நுழைந்து 
காதலும் கொண்டாயே ..
கனவுக்குள் நீ புகுந்து 
இம்சைகளும் செய்தாயே..

அகிம்சையின் வடிவத்தை 
உன்னுருவில் கண்டேனே 
இலைக்குள் நரம்பு போல் 
இதயத்தை ஊடறுத்து சென்றாயே
இதயத்தில் துளையிட்டு 
ஏனடி சென்று விட்டாய்?

தொட்டு நீ பேசவில்லை ஆனால் 
சிரிப்பாலே சிதைதாயே 
புன்னகையால் என்மனதை 
கொள்ளையிட்டு சென்றாயே 
என்னை மறந்த பொழுதும் 
உன்னை நினைக்க மறக்கலையே 
காற்றலைகளில் என் சுவாசக்காற்று 
நீ தானே என்னுயிரே

இன்று கனவான நினைவாலே 
விழியோரம் பல கதைகள் 
விழி சொல்லும் கதை கேட்டு 
வழி சொல்ல நீ இல்லை 
தொட்டு பேசாத என்னை 
விட்டுச் சென்றாயடி நீ
துடிக்குதடி என் இதயம் 
தவிக்குதடி என் உலகம் ...

பணக்கார மோகமும் 
பாசாங்கு வாழ்கையும் 
ஆடம்பர வீடும் 
விலை உயர்ந்த காரும் 
உயிர் உள்ள என்னை விட 
உயிரற்ற ஜடங்கள் மேல் 
நீ கொண்ட மோகம் அதுவே 
நம் காதலின் சாபம்

சிரித்து பேசும் போது புரியவில்லை 
பாசமா இல்லை வேஷமா என
அப்பாவியாய் இருந்த என்னை 
ஒப்பாரி வைக்க செய்து விட்டாய் 
உன் பணக்கார மோகத்துக்கு முன் 
என் காதலின் மோகம் ஈடுகொடுக்கலையே   
இன்று தான் உணர்ந்தேன் நான் 
வறுமை கொடியது என்று ..

உன்னை வட்டமிட்ட என்னை இன்று 
சல்லடை போட்டாய் நீ 
சிறகு விரித்து பறக்க நினைத்தால் 
லாடங்களை கொடுத்து விட்டாய் 
கண்ணீர் கோலங்களை என் 
முகத்திரையில் திரையிட்டாய்
அகிம்சையின் பொய் முகத்தால் 
மனத்திரையையும் கிழித்தாய்

காதல் தீயை என்னுள் மூட்டி விட்டு 
அதில் நீ குளிர் காய்கிறாய் 
அணையாத காதல் தீ என்னுள்ளே 
கொழுந்து விட்டெரியும்  
பணக்கார மோகம் உனக்குள்ளே 
அகிம்சையின் பொய் முகத்தால் 
தவிக்கிறேன் நான் இங்கே ...
பணம் காட்டும் திமிரினால் சிரிக்கிறாய் நீ அங்கே ...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket