Sunday, December 25, 2011

சுனாமி

நீலக்கடலே உன்னில் 
நீந்திவிளையாடினோமே
உன் கரையில் கூடிக்குலாவி
கொஞ்சிப்பேசிய உறவுகள் எல்லாம் 
உருக்குலைந்த பிணமாக 
கடலில் பாதியும் கரையில் 
மீதியுமாய் கையில் தந்தாயே..

பூவென்றும் பிஞ்சென்றும் 
அறியாதா? உன் மனம் 
கடல் கொண்ட குடல் என்ன 
உயிர் கொண்ட உடலை 
இரை கேட்கும் மிருகமா? 

உன் அலையால் தவழத்தான் 
முடியும் என்று என்றோ ஒருவன் சொன்னானே 
அந்தக்கூ ற்றின் மேல் கொண்ட சீற்றமா ?
ஆணவத்தில் நீ ஆடிய கோரத்தாண்டவம் ?



சிப்பி பொறுக்கிய 
சிறுசுகளின் சிதைந்த பிணத்தை 
பொறுக்க வைத்தாய் 
கப்பலேற கரைவந்த்தவனை 
கட்டுமரம் கொண்டு தேட வைத்தாய் 

நீ வயிற்றில் சுமந்த பிள்ளைகளை 
வலை வீசி கொன்றதாலா 
வயிற்றில் சுமந்தவளை 
வக்கிரமாய் சிதைத்து விட்டாய்?

உன் வருகையின் சுவடுகள் 
அழிந்து விடக்கூடாதென்ரா
விரும்தோம்பிய மண்டபமும் 
தொளுதேற்றிய கோயில்களும் 
சிதைந்து போய் கிடக்கிறது ?

கடல் கன்னி உள்ளிருக்க 
மனிதகுலக் கன்னிகளை 
தீண்டிப்பர்ர்க ஆசை கொண்டா 
தேடி வந்து கவர்ந்து சென்றாய்? 

சூரியக்குளியலில் சுகம் கண்ட 
விருந்தாளிகளை 
சூனியக்குளியலில் முக்கி எடுத்து 
மூழ்கடித்தாய்..

தானியங்கி யந்திரமாய் 
மேனிகளை அரைத்து விட்டாய் 
புதைகுழி வெட்ட யாரும் இல்லையென்றா
பல பிணங்களை கொண்டு சென்றாய்? 

ஆளிபேரலையாய் எழுந்து 
வெள்ளை சேலை பல பரிசளித்தாய் 
தன மனம் காத்து குளித்தவளை
துணியின்றி ஓட வைத்தாய் 

கொள்ளை வைக்க பிள்ளை இருந்தும் 
கொள்ளி வாய்ப்பேயிடம் கொடுத்து விட்டாய் 
அள்ளி அணைத்த கைகளாலே 
மண்ணை கிள்ளி போட வைத்தாய்..

தாய் மனதில் தங்கிய வடுக்கள் 
தந்தை மனதில் தேங்கிய கறைகள்
வக்கிரக்கிறுக்கல்கள் வரிசையாய் 
இருக்கிறதே பல வருடம் தாண்டியும்

ஆழக்கடலே நீலக்கடலே 
தவழ்ந்து வந்து கால் நனைத்துவிடு
திரண்டு வந்து தலை எடுத்து விடாதே 
உன் கடலலை பார்க்கும் போது
என் நெஞ்சுக்குள் சுனாமி நினைவலைகள்..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket