Saturday, December 24, 2011

வேண்டாம்

கடந்து வந்த காலங்களே 
கொஞ்சம் களைப்பாற மாட்டீர்களா? 
பல ஆண்டு தாண்டி இப்போ 
இருபத்தோராம் நூற்றாண்டில் நாம் ..

வாள் ஏந்திய மன்னர்கள் 
தலைக்கனம் கொண்ட வல்லரசுகள் 
போதித்த போதனைகள் 
புதைபட்டுபோகட்டும்..

பெற்ற பிள்ளையும் 
புறம் தள்ளிய அன்னையும் 
கருத்து வேறுபாட்டால் 
கண்கலங்க வேண்டாமே..

மாதுவை கண்ட பின்பு 
மதிகெட்டுப்போய் நின்று 
நண்பனும் நண்பனும் 
மல்லுக்கு நிற்க வேண்டாம்.

சொத்துக்கள் வேண்டுமென்று 
சொந்தங்கள் கூடிவந்து 
கல்லறைகள் கட்ட வேண்டாம்..


வாயில்லாப் பிராணிகளை 
தீனியுடன் சிறைவைக்கும் 
கூடங்கள் வீட்டில் எதற்கு? 

போதிமர அடியினிலே 
புத்தபிரான் சாட்சியாக 
களைப்பாறும் வழிப்போக்கர்களே
வாக்கு வாதம் வேண்டாமே..

நன்றாய் வாழ்ந்தொருவன் 
காட்டுகையில் அவன் வழியில் 
நின்று கொண்டு கொக்காக எரிக்கின்ற 
கோரப்பார்வைகள் நமக்கெதுக்கு? 

ஜாதி மத பெயரைசொல்லி 
சாதிசனம் அறிவில் நுழைந்து 
வஞ்சத்தை வளர்க்கும் 
போதனைகள் வேண்டாமே..

தனி மனித தேவைக்கு 
பொது உடமை பலியாகும் 
ஊர்வலங்கள் வேண்டாம்..

துட்டுக்கு கஷ்டப்படும் 
ஏழைகளை கசக்கி 
பிழிந்தெடுக்கும் முதலாளி 
மனம் கொஞ்சம் மாறட்டும்..

ஓட்டை வழியே தீதொன்று 
எட்டிப்பர்க்கும் சட்டை கொண்ட 
சட்டங்கள் சத்தியமாய் வேண்டாம்..

வேண்டாம் தீது வேண்டாம் 
யுத்தம் செய்து வாழ வேண்டாம் 
கத்தி கொண்டு பேசவேண்டாம் 
புத்தி கெட்ட வாழ்க்கை வேண்டாம்


No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket