Monday, December 12, 2011

வறுமை

எண்ணையின்றி எரியமறுக்கும்
விளக்கினை அணைத்துவிட்டு 
முழுமதியின் நிலவொளியை 
வேண்டிநிற்கும் படிப்பாளி..

நண்பகலில் சூரியனும் 
நள்ளிரவில் சந்திரனும் 
உச்சம் கொடுக்கும் 
ஓலைக்கூரை...

வருகின்ற வரனுக்கு 
தனம் இன்றி தவித்திருக்கும் 
கிழிந்த பாயில் படுத்துறங்கும் 
அழகியின் தாய்க்கிழவி..


தண்ணீரில் முகம் பார்த்து 
தலை சீவி தயாராகும் 
மிருகங்கள் பசிபோக்கும் 
விலை மாது..

கடலோரக்காற்றினிலே 
கவியொன்றை முனங்கிக்கொண்டு
மீன் தெரியும் 
குட்டிப்பையன் ..

பாக்களை பூக்களாக 
அர்ச்சதை போடும் கவிஞன் 
வீட்டில் வைத்த உலையில் 
கொதிக்கிறது வெந்நீர் மட்டும் ..

பால்குடிக்கும் பிள்ளை 
ரத்தம் புசிப்பது தெரியாமல் 
வற்றிப்போன தாய் மடிகள்..

கையில் கூப்பனும் 
கிழிந்த பையும் கொண்டு 
கால் கடுக்க காத்திருக்கும் 
நிவாரணம் பெறுவோன்..

சிறுமையும் வறுமையும் 
சேர்ந்த கொடுமை தாங்காது
இளமையும் முதுமையும் ..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket