Tuesday, December 6, 2011

பாவையை கண்டதும்..

கருவோடு என்னை தாங்கி
பத்துத்திங்கள் பத்திரமாய்
என்னை ஈன்றேடுக்க நீபட்ட
பெரும் பாடு
சொல்லியழ யாரும் இல்லை
நான் அழுதால்
நீ துடிப்பாய் நீ அழுதால்
யார் துடிப்பார்?

ஐம் புலன் தந்தாய்
அதற்கு அசைவும் தந்தாய்
ஆனால் நீ மட்டும் ஏனோ
உன்னை பற்றி எண்ணவில்லை?
புரண்டு படுத்தால்,
கருவிலேயே கலைந்து விடுவோம் என்றா
தூக்கத்தை தொலைத்து விழித்திருந்ததாய்?

நான் தூங்க நீ விழித்து ,
தாலாட்டு நீ பாடி,
உறங்கிய பின் நீ உண்டு
நான் சிணுங்கியதும்
உணவை வெறுத்து
ஓடிவந்து கட்டி அணைத்து
முத்தமிட்டாயே தாயே ...!!!


பள்ளி சென்று கல்வி
நான் பயில கண்முழித்து
நீ எழும்பி கண்ணியமாய்
செய்த சேவை
காலமுள்ள காலம் வரை
கண்மணி போல் காத்தாயே
தாயே ..!!!

பத்து வயது நான் அடைய
பாரினிலே நான் உயர
பக்குவமாய் புத்தி சொல்லி
பாலும் தெளி தேனும்
பசியாற பால்சோறும்
தினம் தோறும் நீ தந்து
உண்ட களையோடு நான் உறங்க  
எனை பார்த்து பசிமறந்தாயே
அம்மா ..!!

ஆய கலைகள்
நான் பயில
ஆணிவேராய் அமைந்தவளே  
சீரும் சிறப்புமாய்
நான் வாழ சிரத்தையுடன்
கண்டிதாயே
தாயே ..!!!


பாவையவளை கண்டதும்
நான் பாசத்தை மறந்ததேன்?
மங்கிய சிரிப்பில் நான்
மயன்கியதேன்?
தெவிட்டாத உறவென்று
நான் எண்ணி
உறவுக்கு உயிர் தந்த உன்னை
மறந்ததேன் ?


காலம் செய்த கோலமா?
கடவுள் செய்த மாயமா?
விதியை நோவதா ?  மதியை நோவதா?
மதி கெட்டு நான் போனேன்
விதி என்ன செய்யும்?


இருபது வருடம் மார் மீதும்
தோள் மீதும் தூக்கி வளர்த்த உன்னை
மறந்து இருபது நிமிடம் கூட பழகாதவள்
பக்கம் பணிந்ததெப்படி ? ?


தேன் என எண்ணி நான் சென்றேன்
தேள் வந்து கொட்டும் என எண்ணவில்லை
பாசம் என நான் இருந்தேன்
வேஷம் என இருக்கவில்லை
கடவுக் கொடுத்த வரம் என்றிருந்தேன்
கணவன் கைபொம்மை என்றாள் அவள்


தாயே உன்னை நீங்கி நான் சென்றேன்
என் நினைவில் நீ இன்னும் வாடுகிறாய்
இன்று வந்தவள் என்னை இன்றே மறந்து விட்டாள்
என்றும் என்னை மறவாமல் நீ 
உன் நினைவுகளில் இன்றுதான் நான்..  


இன்னொரு பிறப்பென்று
எனக்கிருந்தால்
மீண்டும் உன் மகனாக
பிறக்கின்ற வரம் கொடு
தாயே ...
இந்த ஜென்மத்தில் செய்த தவறை
இன்னொரு ஜென்மத்தில் செய்ய மாட்டேனம்மா
தூக்கத்தை தொலைத்து
வாடுகின்றேன் ஒரு தாலாட்டு
பாடு தாயே நான் தூங்க..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket