Wednesday, November 30, 2011

நட்பு

வாழ்கையின் வனப்பில் கூந்தலிலே 
நீந்தும் பூக்கள் எல்லாம் வாடிவிடும் 
காலநிலை மாறினாலும் உதிராமல் 
காத்திருந்து வாடாமல் பூத்திருந்து 
வாழும் காலமெல்லாம் வாசம் வீசும் 
உயிர்களில் மட்டும் பூக்கும் நட்பு.. 

கொண்ட காதல் சிலநேரம் தொண்டை 
முள்ளாய் சிக்கும் போதும் நட்பு மட்டும்
உடனிருந்து காதல் தந்த ரணங்களை
கணங்களிலே அழித்து விட்டு விழி 
தந்த கண்ணீரை தன் கைகுட்டையில் 
தாங்கி நிற்கும் சுமைதாங்கி நட்பு ...

Tuesday, November 29, 2011

காதல்

பட்டுப்போன வாழ்க்கையிலே 
மொட்டுப்பூக்கும் யோகம் காதல் 
வற்றிப்போன உதடுகளுக்கு 
வற்றாத ஜீவநதி காதல் 
அமாவாசை இரவுகளில் 
கனவினில் நிலவு காதல்..

சேலையில் நூலை போல்
வாழ்கையின் வசந்தம் காதல் 
வெய்யிலில் நிழலைப்போல் 
பிரியாத காவல் காதல் ..
நினைவுகளை தவழ வைக்கும் 
சிரிக்கின்ற மழலை காதல்...

Monday, November 28, 2011

வண்டிச்சக்கரங்கள்

கால நீரோடையில் கசங்கிப்போய்
கிடக்கிறது வாழ்கையின் இலட்சியவெறி
தட்டி கொடுப்பவரும் துட்டுக்கு
கைநீட்டும் சீர்கெட்ட உலகம் இது

ஓட்டை விழுந்த பானையாய்
உடலை விட்டு உயிர் கசியுது
துடுப்பிழந்த ஓடம் போலே
கரை சேர ஏங்குது ......

Sunday, November 27, 2011

காதல் வலி தந்தவளே..

காதலுடன் சண்டையிட்டு என்னை விட்டு
சென்றுவிட்டாய். சென்றுவிட்ட உன்னை
எண்ணி கொன்றுவிட்டேன் என் மனதை
சிறை வைத்து விட்டேன் என் நிழலை

என் மனகோட்டையின் முழுநிலத்தில்
கட்டிவைத்தேன் காதல் கோட்டை
ராணியில்லா கோட்டையிலே
சாமரங்கள் சபிக்கிறதே ...

Friday, November 25, 2011

தன்னம்பிக்கை


காயம் இன்றி ஒருநாளும்
கருங்கல் சிலையாகாது
நெஞ்சில் துளை வாங்காமல்
புல்லாங்குழல் கீதம் தராது..

அச்சாணி நெரிபட்டால்
சக்கரம் சிரிக்கும்
வலிதந்த வாழ்கை தானே
சரித்திரம் படைக்கும்..

Thursday, November 24, 2011

கார்த்திகை மலர்கள்

கல்லறையில் துயில் கொள்ளும் மாவீரரே,
நீங்கள் கண்திறக்கும் மாதம் இந்த கார்த்திகை தானே
செந்தமிழன் வாழவென சிலை ஆனிரோ?
இங்கு வன்கொடுமை தீரவேண்டி படை சேர்ந்தீரே..!!!

எழுத்தில் மட்டும் ஆயுதம் இல்லை கழுத்திலும் தானே
களத்தினில் உங்கள் வீரம் எழுத்தினில் கண்டோம்
நீங்கள் நடந்து வந்த பாதை எல்லாம் கார்த்திகை மலர்கள்
உங்கள் பாதம் தொட்டு ஆசிபெற கார்த்திகையில் பூக்கும் .

கருப்பினை காதலித்த கதை சொல்லுங்கள்
போர்களமே வாழ்க்கை ஆன விதி பாருங்கள்
கழுத்தினில் நஞ்சு குப்பி கடல் அலையிலும் உங்கள் சக்தி
தமிழினில் உங்கள் பக்தி அழித்தீர் பகையை சுத்தி..

Tuesday, November 22, 2011

கரு விழியாலே சாய்த்தவளே

உன் கூந்தல் காதலிக்கும் மலரை
என் புத்தகம் தேடிப்பார் இருக்கும்
சருகான அம்மலரை சிதறாமல் சேமித்து
நானுனக்கு வாழ்த்து மடல் நெய்வேனே...

கரு விழியாலே சாய்த்தவளே
கலகங்கள் செய்தவளே உன் விழி
சொல்லும் கதை கேட்டு என்
வாயினிலே சிரிப்(பூ)பு மலரும்....

உனைப்பார்த்து தலை ஆட்டும்
மரங்களிலே தாவிவந்து
மனிதகுரங்கெல்லாம் காத்திருக்கும்
உன் நினைவுகளை கவர்ந்து செல்ல ...
PhotobucketPhotobucket
Photobucket