Tuesday, January 10, 2012

என்னவளே...

காதல் தந்த கன்னிப்பெண்ணே 
காண ஏங்கும் எந்தன் கண்ணே 
காலை மாலை வாசல் முன்னே 
காத்திருப்பேன் வாடி வெளியே..

தினசரி வருகின்ற தினத்தந்தி போல் வந்து 
என் கைகள் சேர்ந்து விடு 
தினத்தந்தி தாங்கிய கவிதையின் உவமையில் 
உன் கண்கள் காட்டி விடு.

ஏனோ என்னுள்ளே நூறு காட்சிகள் 
நூறும் நீ தானடி 
காதல் எனக்கிங்கு கண்ணா மூச்சியா 
கைகள் அலைகின்றதே..

மனக்கண்ணில் நான் காணும் கனவினில் 
நீ வந்தால் மணிகூட சிறுதுளியே 
சிறுதுளி பெருவெள்ளம் போல் வந்து 
நனைத்தாலும் கண்ணிமை நான் திறவேன்..


வருடல்கள் உன்னிடம் வாங்கிய பூக்களை 
மனதுக்குள் தூற்றுகிறேன்
வருடிய பூக்களை திருடியே நான்சென்று 
திரவியம் ஆக்குகிறேன்..

உனைச்சேர துடிக்கின்ற இதயங்கள்
பல உண்டு உண்மையை நான் அறிவேன் 
உனக்காக துடிப்பையும் நிறுத்தும் இதயம் 
நான் கொண்டு காத்திருக்கேன் 

நேரில் நான் காணும் முத்தக்காட்சிகள் 
நித்தம் சலிக்குதடி 
கனவில் நீவந்து முத்தம் தராவிட்டால் 
நெஞ்சோ வலிக்குதடி...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket