Thursday, November 17, 2011

தோழியின் பிரிவு

காகிதம் நனைகிறது 
கண்கள் குளமாகியதால் 
தோழியே உன்னை எண்ணி 
கவிதை வடிக்க தொடங்குகிறேன் 
கவிதை முடியும் முன் 
காகிதம் கரையுமோ தெரியவில்லை ..

மான்குட்டியாய் துள்ளி திரிந்து 
மனம் விட்டு பல கதை பேசி 
ஓடை தண்ணீரில் ஓடி விளையாடி 
மாற்றான் தோப்பில் மாங்காய் உண்டு 
சந்தோசமாய் சிறகு விரித்து பறந்தோம் 
சிறகொடிந்து போனதே

அன்பினில் தாயானாய் 
தந்தையாய் கண்டித்தாய் 
தங்கையாய் சிணுங்குவாய் 
அண்ணனாய் அதட்டுவாய் 
ஒரு உருவில் குடும்பம் கண்டேன் 
குடும்பமெனும் கோயில் கொண்டேன் 
அந்த கோயிலில் நீ ஏன் சிலையானாய்?

நான் சிரிக்க வேண்டும் என்று 
நீ சிரித்த நாட்கள் 
நான் அழாமல் இருக்க 
உன் சோகத்தை மறைத்த நாட்கள் 
இப்போது எனை பார்த்து ஏங்கும்
நம்மூரின் இயற்கை வளங்கள் எல்லாம் 
கேட்கின்றன எங்கே அவள் என்று ?

தனிமையிலே தவிக்கிறேன் 
நட்பினால் துடிக்கிறேன் 
தூக்கத்தை தொலைத்துவிட்டு 
தெரு விளக்காய் எரிகிறேன், 
தினம் தோறும் உன் கல்லறையில் ...
நம் நட்பின் சுவடுகளை சுமந்தபடி ...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket